மதம்மாறி இடஒதுக்கீடு சலுகை

கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் உரிய கல்வி தகுதி இல்லாமல் பணியில் சேர்ந்து பதவி உயர்வு பெற்ற கௌதமன் என்பவரின் பதவி உயர்வையும் ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், ‘உரிய கல்வித் தகுதி பெறாத கௌதமனின் நியமனமும் பதவி உயர்வும் சட்டவிரோதமானது, அவரை நியமனம் செய்வதற்கு பரிந்துரைத்த தேர்வுக் குழுவுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு உத்தரவிட்டார். கல்வி நிறுவனங்கள் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும். விவரங்களை அறிவிப்பு பலகை, இணையத்தில் வெளியிட வேண்டும். பணியாளர்கள் தகுதி குறித்த அதிகாரிகள் மூன்று மாதத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். நேர்முகத்தேர்வு அனைத்தும் வீடியோ பதிவு செய்ய வேண்டும். சட்டவிரோதமாக நியமனம் செய்யப்பட்டவர்கள் மீது உடனடியாக பணி நீக்கம், ஊதியம் திரும்ப வசூலிப்பு செய்ய வேண்டும்’ என தெரிவித்தார். முக்கியமாக, ‘இட ஒதுக்கீட்டின் கீழ் பல்கலைக்கழகங்களில் பணி நியமனம் பெறுவதற்காக மதம் மாறியது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட பணியாளர்களை உடனடியாகப் பணி நீக்கம் செய்ய வேண்டும்’ என தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.