புதியவகை கொரோனாவுக்கு பெயர் சூட்டல்

பல்வேறு நாடுகளிலும் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகைகளை எளிதாக அடையாளம் காணும் பொருட்டு, அவற்றிற்கு பெயர்களை சூட்டியுள்ளது உலக சுகாதார அமைப்பு. அவ்வகையில், 2020 செப்டம்பரில் கண்டறியப்பட்ட கொரோனா வகையை  ‘ஆல்பா’ என்றும், கடந்த ஆண்டு அக்டோபரில் பாரதத்தில் முதலில் கண்டறியப்பட்ட B.1.617 வகை கொரோனாவை ‘டெல்டா’ எனவும், தென் ஆப்பிரிக்காவில் 2020 மே மாதம் கண்டறியப்பட்ட கொரோனாவை ‘பீட்டா’ என்றும், பிரேசிலில் 2020 நவம்பரில் கண்டறியப்பட்ட வகை ‘காமா’ எனவும், அமெரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா வகையை ‘எப்ஸிலான்’ எனவும் பெயரிட்டுள்ளது.