ஆந்திர அரசின் தேசதுரோக வழக்கு

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி., கிருஷ்ணம் ராஜூ, சமீப காலத்தில் முதல்வர் ஜெகன் மோகனுக்கு எதிராக கலகக் குரல் எழுப்பி வருகிறார்.முதல்வர் ஜெகன் மோகன் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு நிலுவையில் உள்ளது.இவ்வழக்கில் ஜாமீனில் உள்ள ஜெகன் மோகன் ரெட்டி நிபந்தனைகளை மீறி செயல்படுகிறார்.அவரது ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்று கிருஷ்ணம் ராஜூ கூறி வந்தார்.இதனால் கிருஷ்ணம் ராஜூவை கைது செய்தது ஆந்திர காவல்துறை.அவர் மீது அரசுக்கு எதிராக சதி, கலகத்தை தூண்டுதல், இரு பிரிவினிரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசுதல், தேசதுரோக வழக்கு என பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.அவரது பேச்சை வெளியிட்ட இரு செய்தி சேனல்களுக்கு எதிராகவும் இதே பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ‘இரண்டு செய்தி நிறுவனங்கள், அவற்றின் ஊழியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.பத்திரிகை, செய்தி தொலைக்காட்சிகளுக்கு சுதந்திரமான கருத்துரிமை உள்ளது.அவற்றிற்கு எதிராக, தேசதுரோக வழக்கு எதற்காக தொடுக்கப்படுகிறது என்பதற்கான விளக்கத்தை நான்கு வாரத்தில் ஆந்திர அரசு தெரிவிக்க வேண்டும்’ என, உத்தரவிட்டுள்ளனர்.