ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணபட்டணத்தை சேர்ந்த ஆனந்தய்யா என்ற பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவர், கொரோனாவுக்கு மருந்து தயாரித்து நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கி வந்தார். இதனை பெற, தினமும் ஆயிரக்கணக்கானோர் அங்கு குவிந்தனர்.இதனால், மருந்து விநியோகத்தை நிறுத்திய மாவட்ட கலெக்டர், மருந்தை சோதனைக்காக அனுப்பி வைத்தார்.இந்த மருந்தை ஆயுஷ் அமைச்சகம் மற்றும் திருப்பதி தேவஸ்தான ஆயுர்வேத நிபுணர்கள் ஆய்வு நடத்தினர்.இதில் பக்க விளைவு ஏதும் இல்லை என நிரூபணம் ஆனது. இது குறித்த ஆந்திர உயர் நீதிமன்ற வழக்கில், ஆனந்தையாவின் மருந்திற்கு தனிப்பட்ட மருத்துவ குணங்கள் உள்ளதால், அதனை எற்பதுடன், பொதுமக்களுக்கு வழங்க அனுமதி அளிப்பதாக ஆந்திர அரசு தெரிவித்தது. மத்திய ஆயுர்வேத மருத்துவ கவுன்சில் அறிக்கை அடிப்படையில், இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.மேலும், ‘பி, எல்’ மற்றும் ‘எப்’ என பெயரிடப்பட்ட மூன்று பாரம்பரிய மருந்துகளுக்கு, அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டது.அதே சமயம், கண்ணில் விடப்படும் சொட்டு மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.