ஆக்சிஜன் சிலிண்டருடன் கூடிய ஸ்ட்ரெச்சர்

கொரோனா பாதிப்புடன் சுவாச சிக்கலும் உள்ள நோயாளிகள் அனைவருக்கும் மருத்துவமனைகளில் உடனே படுக்கைகள் கிடைப்பதில்லை.இதற்காக சில தொண்டு அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய பேருந்துகளை இலவசமாக நடத்துகின்றனர்.எனினும் நோயாளிகளை படுக்கைகளுக்கு விரைவில்இடம் மாற்றுவது அவசியம்.இதற்கு தீர்வு தரும் விதமாக, ‘ஆக்ஸிஜன் ஸ்ட்ரெச்சர்’களை மதுரைபாண்டியன் சரஸ்வதி யாதவ் பொறியியல் கல்லூரி மாணவர்கள் உருவாக்கி உள்ளனர்.மெக்கானிக்கல் துறை உதவி பேராசிரியர் பொன்வேல் முருகன் வழிகாட்டுதலுடன் மோகன், வெற்றி மணிகண்டன், தனபிரகாஷ், போஸ் ஆகிய 4 மாணவர்கள் இணைந்து ரூ.55,000 செலவில் 3 நாட்களில் இந்த ஸ்ட்ரெச்சர்களை உருவாக்கி உள்ளனர்.இந்த ஸ்ட்ரெச்சர்களில் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும் பெரிய வகை ஆக்சிஜன் சிலிண்டர்களை படுக்கைக்கு கீழேயே வைத்துக்கொள்ள முடியும்.இதனால், நோயாளிகளுக்கு படுக்கை வசதியுடன் கூடுதல் நேரம் ஆக்சிஜன் தடையின்றி கொடுக்க முடியும். இந்த ஸ்ட்ரெச்சர்கள் உடன் சேர்த்து சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பிபிஇ கிட், முகக்கவசங்கள், கையுறைகளையும் சேர்த்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அர்ப்பணித்து உள்ளனர்.