கோவிட் தடுப்பூசிக்குலஞ்சம்

சென்னை, மாதவரத்தில் 23வது வார்டில் மாநகராட்சியின் நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனை இயங்குகிறது.இங்கு, கடந்த இருதினங்களாக தடுப்பூசி இருப்பு இல்லை என பலரை திருப்பி அனுப்பி உள்ளனர்.புழல் அடுத்த கல்பாளையம் பகுதியை சேர்ந்த நந்தகோபாலுக்கும் அவர் மனைவிக்கும் இதே பதிலை கூறியுள்ளனர்.அவர்கள் வெளியே வந்தபோது, அங்குள்ள காவலாளி தினகரன், அவர்களிடம், ‘கோவிட்ஷீல்டுக்கு, 500 ரூபாய், கோவாக்சினுக்கு, 800 ரூபாய் கொடுத்தால்தடுப்பூசி கிடைக்கும்’ என, ரகசியமாக கூறியுள்ளார். இதையடுத்து, 300 ரூபாயை ரொக்கமாகவும், 200 ரூபாயை, ‘கூகுள் பே’ மூலமும் நந்தகோபால் கொடுத்துள்ளார்.மற்றொரு ஊழியர் பிரசாத் கொடுத்த துண்டு சீட்டு மூலம் அங்குள்ள மருத்துவர் நந்தகோபாலுக்கு ‘கோவிட்ஷீல்டு’ தடுப்பூசி செலுத்தியுள்ளார்.பிறகு, அங்கு நடந்த பேச்சுவார்த்தை, கூகுள் பே மூலம் பணம் கொடுத்தது உள்ளிட்ட ஆதாரங்களுடன் புழல் காவல்துறையில் புகார் செய்தார் நந்தகோபால்.இதனையடுத்து, இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.