திருவள்ளுவர் திருநாட்கழகம் அறக் கட்டளையின் சார்பில் ஐந்தாம் ஆண்டாக சென்னை மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயிலில் சிறப்புப் பூஜையுடன் தொடங்கியது.
சென்னை சமஸ்கிருதக் கல்லூரியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற பா.ஜ.கவின் ராஜ்யசபா உறுப்பினர் இல.கணேசன், திருவள்ளுவர் மீது பக்தி கொண்டவர்கள், அவரின் பிறந்தநாளை நாடு முழுவதும் கொண்டாடி வருகிறார்கள். சென்னையில் சாமி தியாகராஜன் திருவள்ளுவரின் திருக்கோவிலில் பல ஆண்டுகளாக இந்நிகழ்ச்சியினை நடத்தி வருகிறார். அறிஞர்கள், வள்ளுவர் பிறந்த தினத்தை அறிந்து ஆராய்ந்து அப்படியே விட்டுவிடாமல் அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இந்த வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் திருவள்ளுவரின் பிறந்தநாளைக் கொண்டாடுவதில் தான் மகிழ்ச்சி அடைகிறேன். பல தலைவர்கள் இந்நாளில் திருவள்ளுவரின் பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார்கள். இதை மாற்ற எவருக்கும் உரிமை இல்லை. அதுபோலவே வள்ளுவரின் பிறந்த நாளை வேறு நாளாக கொண்டாடுவதற்கு எவருக்கும் உரிமை இல்லை! தமிழ் பண்பாட்டிற்கு செய்யும் துரோகம். வள்ளுவருக்கு ஏற்படுத்தப்பட்ட இந்த கலங்கத்திற்கு எதிராக போராடும் காலம் வெகு தூரத்தில் இல்லை.” என்று கூறினார்.
திருவள்ளுவர் திருநாட்கழகம் அறக்கட்டளையின் சார்பில், திருவள்ளுவரை தெய்வமாக போற்றிக் கொண்டாடிய ஆங்கிலேயர் ‘எல்லீசர்’ விருது, திருக்குறளை ஆங்கிலத்தை மொழிப்பெயர்ந்து உரை எழுதிய வழக்கறிஞர் பசுபதி தனராஜுக்கு மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் திருவள்ளுவரின் திருவுருவச் சிலையை தன் சொந்த செலவில் உலகின் பல பகுதிக்கு அனுப்பி வள்ளுவரின் புகழை பாரெங்கும் பரவச் செய்த வி.ஜி. சந்தோஷத்திற்கு ஹிந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் எஸ். ராமகிருஷ்ணனும் வள்ளுவரின் வார்த்தைகளை மெய்ப்பிக்கும் வகையில் வாழும் ஆர்.சுபாஷுக்கு மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசனும் விருதுகளை வழங்கினார்கள்.
தவத்திரு ஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள் ஆசியுரையுடன் விழா நிறைவுபெற்றது.
(தகவல்: காந்தி கிராம பல்கலைக் கழக மாணவர்கள், அ. ராஜேஷ் வர்மா,
சி. தினேஷ்குமார், ப. விஜயகுமார், க. முருகேசன்)