‘அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.கோயில் கட்டுமான பணிகள் தலா 12 மணி நேரம் என இரண்டு ஷிப்டுகளில் 24 மணி நேரமும் நடந்து கொண்டிருக்கின்றன.பூமியின் சுமார் 1.2 லட்சம் சதுர மீட்டர் தோண்டப்பட்டுள்ளது.அஸ்திவாரப் பணிகள் அக்டோபருக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ராமர் கோயில் சுமார் இரண்டரை ஏக்கரில் கட்டப்படும், வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க நிலத்திற்குள் பர்கோட்டா வகை சுவர்கள் கட்டப்படும்.இந்த வேலை இருக்கும் மூன்று ஆண்டுகளில் நிறைவடையும்.தேவையான அனைத்து முன் தயாரிப்புகளுடன் நாங்கள் வேலைகளை செய்கிறோம்.ஸ்ரீராமர் அருளால், தொழிலாளர்கள், பொறியியலாளர்கள் அனைவரும் ஆரோக்கியமாக உள்ளனர்.அயோத்தியில் ஸ்ரீராமர் கோயில் கட்டுமானத்திற்கான வீட்டுக்கு வீடு நிதி சேகரிப்பு இயக்கம் நடைபெற்றது. அதில் கோயிலுக்கான தங்கள் பங்களிப்பை அளிக்க முடியாத பக்தர்கள் அதற்கான வலைத்தளத்தின் மூலம் பங்களிப்புகளை இன்னமும் அளிக்க முடியும்’ என ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அரக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்தார். முன்னதாக கடந்த மார்ச் 8ம் தேதி செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி) தேசிய துணைத் தலைவர் ராய், ‘அயோத்தியில் ஸ்ரீராமர் கோயில் கட்டுவதற்கான நன்கொடை அளிப்பில் ராஜஸ்தான் அதிக பங்களிப்பு செய்துள்ளது’ என்றார்.