தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை

தேசம் முழுவதும் கொரோனா பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதற்கு முக்கிய ஆயுதமாக இருப்பது தடுப்பூசி.இதனால் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்கிற விழிப்புணர்வை மத்திய, மாநில அரசுகள் செய்து வருகின்றன.இருப்பினும் போதிய விழிப்புணர்வு இன்மை, தேவையற்ற தயக்கம், தவறான வழிகாட்டுதல்கள் காரணமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள சிலர் மறுக்கின்றனர். சமீபத்தில், உத்தரபிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி போட வந்தவர்களைப் பார்த்து விஷ ஊசி போட வருகிறார்கள் என நினைத்து அக்கிராமத்தினர், சரயு நதியில் குதித்து தப்பித்த சம்பவமும் நிகழ்ந்தது. இந்நிலையில், உ.பியில், எடவாக் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு மது விற்பனை செய்ய வேண்டாம் என மாவட்ட நிர்வாகத்தினர் அறிவுறுத்தியுள்ளது.பைரோஸ்பாத் மாவட்ட நிர்வாகம், அரசு ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டுமே இந்த மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.