பாபா ராம்தேவுக்கு டாக்டர்கள் சவால்

ஐ.எம்.ஏ எனப்படும் இந்திய மருத்துவ சங்கத்தைச் சேர்ந்த டாக்டர் அஜய் கன்னா என்பவர் யோகா குரு பாபா ராம்தேவுக்கு, ‘அலோபதி’ மருத்துவம் குறித்து அவதுாறான கருத்து பரப்பியதாக ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.இந்நிலையில், அலோபதி மருத்துவம் குறித்து தங்களுடன் நேருக்கு நேர் விவாதிக்க வேண்டும் என பாபா ராம்தேவுக்கு கடிதம் எழுதியுள்ளார்அஜய் கன்னா.மேலும், விவாதத்தில் பங்கேற்க,பதஞ்சலி யோகபீடத்தில் இருந்து பதிவு செய்த ஆயுர்வேத நிபுணர் குழுவை அனுப்ப வேண்டும். ராம்தேவ் தெரிவித்த கருத்துகள் குறித்து, ஐ.எம்.ஏவில் பதிவு செய்த மருத்துவர்கள் குழுவினருடன், பத்திரிகையாளர்கள், ஊடகத்துறையினர் முன்னிலையில் நேரடியாக விவாதிக்க வேண்டும்.ஆயுர்வேத நிபுணர் குழுவில் பாபா ராம்தேவும் அவரது உதவியாளர் பாலகிருஷ்ணனும் பார்வையாளர்களாக மட்டுமே பங்கேற்கலாம்.விவாதத்திற்கான நாள், நேரம் ஆகியவற்றை ராம்தேவ் முடிவு செய்யலாம்.இடத்தை நாங்கள் முடிவு செய்வோம்’ என அதில் கூறப்பட்டுள்ளது.