சி.பி.எஸ்.இ மற்றும் ஐ.சி.எஸ்.இ., பாட திட்டங்களில், ஏப்ரல் மாதமே புதிய கல்வி ஆண்டு துவங்கிவிட்டது. மாணவர்களுக்கு புதிய கல்வி ஆண்டுக்கான பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.தமிழக பாடத்திட்டத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜூனில்தான் கல்வி ஆண்டு துவங்கும்.அதன்படி, மே 1 முதல் கோடை விடுமுறையை பள்ளி கல்வி இயக்குனரகம் அறிவித்தது.புதிய கல்வி ஆண்டுக்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள, மே மாதம் இறுதியில், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டியிருக்கும் என முன்பு அறிவிக்கப்பட்டது.கோடை விடுமுறை காலம் நேற்றுடன் முடைந்துவிட்டது.இன்று முதல் புதிய கல்வி ஆண்டு துவங்குகிறது.கடந்த ஆண்டில், கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த போதும், ஜூன் 1 முதல் ஆன்லைன் வழி பாடங்களை நடத்த, பள்ளிகளுக்கு கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியது.அதன்படி, ஆன்லைன் வகுப்புகள் துவங்கின.ஆனால், தற்போது புதிய கல்வி ஆண்டு துவங்கும் நிலையில் அதற்கான முன்னேற்பாட்டு பணிகள் ஏதும் இதுவரை துவக்கப்படவில்லை.புதிய கல்வி ஆண்டு குறித்து பள்ளிக்கல்வி இயக்குனரகம் எந்த தகவலையும் தங்களுக்கு அனுப்பவில்லை என, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.