உத்தர பிரதேசத்தில், அலிகரில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் நிஹாகான், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்தவர்களின் உடலில் ஊசியை மட்டும் செலுத்திவிட்டு, அதில் உள்ள மருந்தை உடலில் செலுத்தாமல் வெளியே எடுத்துவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். தலைமை மருத்துவர் ஆஃப்ரீன் அதைப் பற்றி முன்னதாகவே அறிந்திருந்தார்.இந்த வீடியோ சமீபத்தில் வெளியானதை அடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.மருத்துவமனையில் ஆய்வின்போது மருந்து நிரப்பப்பட்ட ஆனால் மக்களுக்கு செலுத்தப்படாத 29 தடுப்பூசிகள் மீட்கப்பட்டன.இதனை அப்பகுதி மக்கள் தடுப்பூசிக்கான ஜிஹாத் இது.மக்களுக்கு தடுப்பூசியும் அதன் பலன்களும் கிடைக்காமல் இருக்க இவர்கள் இதனை திட்டமிட்டே செய்கின்றனர் என கூறியுள்ளனர்.இது சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.