ஆஜ்தக் விவாதத்தில், காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர்சுப்ரியா ஸ்ரீநடே, “டுவிட்டருக்கு உண்மையிலே பாடம் கற்பிக்க வேண்டுமென மோடி விரும்பினால், அது சுலபம். சுமார் 68 மிலியன் தொடர்பவர்களை கொண்டிருக்கும் மோடி, டுவிட்டரிலிருந்து வெளியேறினாலே போதுமே. அதை விட்டுவிட்டு ஏன் டுவிட்டரைப் பற்றி சதா குறைசொல்லிக்கொண்டுத் திரிகிறீர்கள்?” என கேட்டார். அதற்கு பதில் அளித்த பா.ஜ.க தேசிய செய்தித் தொடர்பாளர் டாக்டர். சம்பித் பாத்ரா, “அப்படிப் பார்த்தால், ராகுல் காந்திகூடத்தான் பாரதத்தில் ஜனநாயகம் செத்துவிட்டது; அராஜகம் அதிகரித்து விட்டது; மன்னராட்சி நடக்கிறது; நிர்வாகம் மோசமாயிருக்கிறது என்று அன்றாடம் புலம்பிக்கொண்டிருக்கிறார். இதற்கு பதிலாக ராகுல் நாட்டை விட்டுவிட்டு வெளியேற வேண்டியதுதானே?” என கேட்டு சுப்ரியாவை வாயை அடைத்தார்.