தமிழகத்தில் தற்போதைய கொரானா முழு ஊரடங்கு காலத்தில் யாரும் வெளியே வர முடியாது, பேருந்து, ரயில் வசதிகள் இல்லை. பலருக்கு வேலையும் இல்லை. இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செயல்பட்டு வரும் கத்தோலிக்க சிரியன் வங்கிக்கிளை நிர்வாகம், அதனிடம் நகைகளை அடகு வைத்து கடன் பெற்ற வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு உங்கள் நகைகளை ஏலம் விடப் போகிறோம் என்று கூறி மிரட்டி கடன் தொகையை வசூலித்து வருகிறது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உடனடியாக அரசு இதில் தலையிட்டு தடுக்க வேண்டும். மிரட்டும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.