செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தில் அரசியல்

கடந்த சில நாட்களாக முதல்வர் ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியம், தங்கம் தென்னரசு, டி.ஆர்.பாலு எல்லோரும் சொல்லும் வார்த்தை ‘செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர, மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது, குத்தகைக்கு தமிழக அரசுக்குத் தர வேண்டும், அனுமதி பெற்றவுடன், உற்பத்தி துவங்கும்’ என்பதுதான். ஆனால், கடந்த சில மாதங்களாக, செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி நிலையத்தில் உற்பத்தியை துவங்க தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கடந்த ஜனவரி 9ல் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனை முன்னதாகத் தெரிந்துகொண்டு ஏதோ தங்களால்தான் இது நடந்தது என்ற மாய பிம்பத்தை ஏற்படுத்த வழக்கம்போல தி.மு.க முனைகிறது. மேலும், அது மத்திய அரசுக்கு சொந்தமான ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம். அங்கு உற்பத்தியை துவங்குவது முழுக்க முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள விவகாரம் என்பதால் விவரம் அறிந்தவர்கள் இவர்களின் பேச்சை கேட்டு நகைக்கிறார்கள்.