சீனாவாக உருமாறும் இலங்கை

சீனாவிடம் வரம்பில்லாமல் பெற்ற கடனுக்கான வட்டியையும், அசலையும் திரும்பச் செலுத்த முடியாமல் அதன் கடன் வலையில் இலங்கை வசமாக சிக்கியுள்ளது.தற்போது மீண்டும் 1.4 பில்லியன் டாலர் கடனில் சிறப்புப் பொருளாதார நகரத்தை உருவாக்கி அதை சீனாவிடம் ஒப்படைக்க உள்ளது இலங்கை.சிறப்புப் பொருளாதார மண்டலமாக சுமார் 600 ஏக்கர் பரப்பில் உருவாக்கப்படும் இந்த கொழும்பு துறைமுக நகர மசோதா, இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சீனாவுக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்படும் இந்தப் பகுதியில் இலங்கை அரசின் கட்டுப்பாடு இல்லாமல் அனைத்து முடிவுகளை எடுக்கும்உரிமையும் சீனாவுக்கு வழங்க இலங்கை முடிவெடுத்துள்ளது. இதனால் ‘சீன மாகாண மசோதா’ என, அந்நாட்டு எதிர்க்கட்சிகள் இதனை விமர்சித்து வருவதுடன் கடும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளன.ஏற்கனவே, ‘சீனாவிடம் 2,000 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் பெற்று உருவாக்கிய அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு சீனாவுக்கே தாரைவார்த்துவிட்டது இலங்கை என்பது குறிப்பிடத்தக்கது.