விலங்கு நல அமைப்பான பீட்டா, மறைமுக இஸ்லாமிய பிரச்சார அமைப்பாக செயல்படுவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. கடந்த பல நாட்களாக கூட்டுறவு பால் நிறுவனமான அமுலை குறி வைத்து, மாட்டு பாலில் இருந்து தாவர அடிப்படையிலான தயாரிப்புகளுக்கு மாறுமாறு நிர்பந்தித்து வருகிறது. மேலும் இதற்காக இந்திய விளம்பர தர நிர்ணய கவுன்சிலில் (ஏ.எஸ்.சி.ஐ) வழக்குத் தொடர்வது, கடிதம், கட்டுரைகள் எழுதுவது, தவறான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்புவது என தொடர்ந்து செயல்பட்டு வந்தது. அவர்களின் கடிதத்துக்கு பதில் அளித்துள்ள அமுல் பொருட்களை தயாரிக்கும் அமுல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆர்.எஸ்.சோதி, ‘நிறுவனம் பால் பயன்படுத்துவதை நிறுத்தினால், கூட்டுறவு பால் துறையை நம்பியுள்ள 10 கோடி மக்களுக்கு யார் வேலை வழங்குவார்கள்? பீட்டா, இந்த பால் விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்தை வழங்குமா?அவர்களில் 70 சதவீதம் பேர் நிலமற்றவர்கள்.அவர்களின் குழந்தைகள் பள்ளி கட்டணத்தை யார் செலுத்துவார்கள்?’ என்று கேள்வி கேட்டுள்ளார். முன்னதாக, அமுலுக்கு எதிராக பீட்டா மற்றும் வேறு இரண்டு அமைப்புகள் தாக்கல் செய்த மனுவை இந்திய விளம்பர தர நிர்ணய கவுன்சில் (ஏ.எஸ்.சி.ஐ) தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.