சிறுபான்மையினருக்கான உதவித்தொகையை முஸ்லிம்களுக்கு 80 சதவீதம், லத்தீன் கத்தோலிக்கர்கள், மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு 20 சதவீதம் என்ற விகிதத்தில் வழங்க கேரள கம்யூனிச அரசு வழங்குகிறது. கேரள அரசின் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஜஸ்டின் பல்லிவதக்கல் மனு கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அம்மனுவில், “சிறுபான்மை சமூகங்களை ஊக்குவிக்கும் போர்வையில் கேரள அரசு, முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் மற்ற சிறுபான்மை சமூகங்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும் செயல்படுகிறது. லத்தீன் கத்தோலிக்க மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவர்களைத் தவிர, மற்ற கிறிஸ்தவ சமூகத்திற்கு இதனால் எந்த நன்மையும் கிடைப்பதில்லை’ என கூறப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிபதி ஷாஜி பி சாலி, தலைமை நீதிபதி மணிகுமார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், ‘இது அரசியலமைப்பிற்கு விரோதமானது, சிறுபான்மை சமூக உறுப்பினர்களுக்கு சமமாக தகுதியும் உதவித்தொகையும் வழங்கத் தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்க வேண்டும்’ என உத்தரவிட்டது.