பட்டியலினத்தவர் அடித்துக் கொலை

டெல்லியின் கல்யாண்புரி, பகுதியை சேர்ந்த பட்டியல் சாதி சமூகத்தைச் சேர்ந்தவர் 17 வயது ஹிந்து சிறுவன் கோபால்.இவர், சில நாட்களுக்கு முன், டெல்லியின் கல்யாண்புரியில் ஒரு மசூதி முன்பாக போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.இதனால் அப்பகுதியை சேர்ந்த முஸ்லிம்கள் அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ‘கடந்த மே 4 அன்று மாலை 3:00 மணிக்கு அந்த முஸ்லீம் கும்பல் எனது பேரன் கோபாலை அழைத்துச் சென்றனர்.இரவு நீண்ட நேரமாகியும் அவன் வீடு திரும்பவில்லை. ​​நாங்கள் அவனைத் தேடினோம்.நாங்கள் காவல் நிலையத்தில் புகாரளிக்கச் சென்றோம், ஆனால் யாரும் எங்கள் புகாரைக் கேட்கத் தயாராக இல்லை, இதற்காக காவலர்கள் கொரோனாவை சாக்கு கூறினர். பின்னர் நாங்கள் ​​ஒரு உள்ளூர் கால்வாயின் அருகே அவனது உடைகள், செருப்புகளைக் கண்டோம்; கால்வாயில் மூழ்கி அடித்துச்சென்ற ஒரு சிறுவனைப் பற்றி ஒரு சிலர் எங்களிடம் சொன்னார்கள். கோபால் எந்த சண்டையிலும் ஈடுபடவில்லை; முஸ்லீம் கும்பல் அவனை ஏன் கொன்றது என்பது எங்களுக்குத் தெரியாது’ என கோபாலின் பாட்டி கமல்வதி கூறியுள்ளார்.

முகமது ஆலிம்தான் பிரதான குற்றவாளி அவனுடன் ஃபெரோஸ் கான், யூசுப் கான் இணைந்தே இக்கொலையை செய்துள்ளனர்.அவர்கள், இன்னும் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர் என்று கோபாலின் சகோதரர் குற்றம் சாட்டியுள்ளார்.’கோபாலின் சடலம் இன்னும் மீட்கப்படவில்லை, தேடிக்கொண்டுள்ளோம்.அதுவரை இது ஒரு காணாமல் போன வழக்குதான்’ என்று காவல்துறை தெரிவிக்கிறது. இதற்கிடையே கோபாலின் குடும்பத்தை ஆதரிக்கும் முஸ்லீம் பெண்களையும் ‘அவர்களை ஆதரித்தால் நாங்கள் உங்கள் குழந்தைகளையும் கொன்றுவிடுவோம்’ என அப்பகுதி முஸ்லீம் ஆண்கள் அச்சுறுத்தி வருகின்றனர்.

சில வாரங்களுக்கு முன்பு, டெல்லியில், ஒரு ஹிந்து ஆணுக்கும் ஒரு முஸ்லீம் பெண்ணுக்கும் இடையிலான திருமணத்தைத் தொடர்ந்து, டெல்லியின் சாராய் காலே கானில் முஸ்லிம்களின் கும்பல் ஒன்று, பட்டியலினத்தவர்கள் வாழும் பகுதியில் கலவரத்தில் ஈடுபட்டது. அந்த கும்பல் மணமகன் வீட்டைத் தாக்கி தீ வைக்கவும் முயன்றது குறிப்பிடத்தக்கது.