வெறுக்கத்தக்க பேச்சு (Hate Speech) என்றால் என்ன என்பதற்கான விரிவான வரையறையை மத்திய உள்துறை அமைச்சகம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதற்காக உள்துறை அமைச்சகம் ஒரு குழுவை ஏற்படுத்தியுள்ளது.இக்குழு விரைவில் அறிக்கையை அமைச்சகத்துக்கு சமர்ப்பிக்கும். இது குறித்து பேசிய டெல்லி தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் குற்றவியல் மையத்தின் தலைவரும், இக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவருமான ஜி எஸ் பாஜ்பை “வெறுக்கத்தக்க பேச்சு என்பது எது, இதை யார் தீர்மானிப்பார்கள்? எந்தவொரு பேச்சு, வன்முறை அல்லது சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க வழிவகுக்குமோ எதுவே ‘வெறுக்கத்தக்க பேச்சு’ என்று பொருள்படும்.வெறுமனே ஒருவரை விமர்சிப்பது வெறுக்கத்தக்க பேச்சு அல்ல.” என தெரிவித்தார்.முன்னதாக, டிஜிட்டல், சமூக வலைத்தளங்களில், வெறுப்புணர்வு தூண்டும் வார்த்தைக்கான தெளிவான, விரிவான ஒரு வரையறை இல்லாததால், குற்றவாளிகளைக் கண்டறிந்து வழக்குத் தொடுப்பது விசாரணை அமைப்புகளுக்கு கடினமான பணியாக உள்ளது. இதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.