பிரபல தனியார் வங்கியான எச்.டி.எஃப்.சி வங்கியின் வாகன கடன் இலாகாவில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு புகார்கள் வந்தன். அதன் அடிப்படையில் விசாரித்த இந்திய ரிசர்வ் வங்கி, எச்.டி.எஃப்.சிவங்கியின் வாடிக்கையாளர்களுக்கு மூன்றாம் தரப்பு நிதி சாராத பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949 (சட்டம்) இன் பிரிவு 6 (2) மற்றும் பிரிவு 8 ன் விதிகளை மீறியதற்காக ரூ.10 கோடி அபராதம் விதித்துள்ளது.