ஆசிய பசிபிக் பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தியாளர்களுடன் ஒரு மெய்நிகர் மாநாட்டில் பேசிய கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, ‘பாரத அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வகுத்துள்ள வழிகாட்டுதல்களுக்கு இணங்கி நடக்க கூகுள் உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், பன்னாட்டு இணையம் மற்றும் தொழில்நுட்ப சட்டங்களை கூகுள் மதிக்கிறது.அந்தந்த நாட்டின் அரசாங்க சட்டங்கள், கோரிக்கைகளுக்கு இணங்கியே குகுள் செயல்படுகிறது.இது நிறுவனத்தின் வெளிப்படைத்தன்மை அறிக்கைகளிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.’ என தெரிவித்தார். புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் கருத்துச் சுதந்திரத்தையும் தனியுரிமைக்கான உரிமையையும் மீறுவதாக டுவிட்டர், வாட்ஸ்அப் போன்றவை புலம்பி வரும் நேரத்தில் சுந்தர் பிச்சையின் கருத்துக்கள் வெளியாகியுள்ளன என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.