ஜெய்சங்கர் குற்றச்சாட்டு

அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ஜெய்சங்கர், அந்நாட்டு முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெக்மாஸ்டருடன், ஹூவர் நிறுவனத்தின் கருத்தரங்கு ஒன்றில்  பங்கேற்றார். அப்போது ‘கொரோனாவால் பாரதம் கடுமையான நெருக்கடியை சந்தித்துள்ளது.எனினும் அமெரிக்க மக்கள் தொகையை விட, இரண்டரை மடங்கு அதிகமுள்ள மக்களுக்கு, மத்திய அரசு பாரபட்சமின்றி இலவச உணவுப் பொருட்களும், வங்கிக் கணக்கில் நேரடியாக பணமும் வழங்கி வருகிறது.ஆனாலும், மத்திய அரசை வேறு மாதிரியாக சித்தரிக்க அரசியல் ரீதியில் பல்வேறு முயற்சி நடந்து வருகின்றன.பாரத மக்கள் ஜனநாயகத்தில் முழு நம்பிக்கை வைத்துள்ளனர்.கடந்த காலத்தில் ஒருவரின் அடையாளம், நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் ஓட்டு வங்கி அரசியல் நடந்துவந்தது.ஆனால், இப்போது அப்படி அல்ல. அனைத்து மதத்தினரும் சமமாக மதிக்கப்படுகின்றனர்.மதசார்பின்மை என்பது, யாருடைய மத நம்பிக்கைக்கும் எதிராக இருக்கக் கூடாது.மத்திய அரசின் நிர்வாகம் குறித்து உண்மையான மதிப்பீடு செய்யும்போது இது குறித்த உண்மை அனைவருக்கும் தெரியவரும்’ என பேசினார்.