குருகிராம் சுகாதாரத் துறையின் நடவடிக்கையால், அங்குள்ள 13 கிராமங்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது.கிராமப்புறங்களில் வீடு வீடாக சோதனை செய்யும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வரும் குருகிராம் சுகாதாரத் துறையின் நடவடிக்கையால் இது சாத்தியமாகியுள்ளது என கூறும் துணை கமிஷனர் யஷ் கார்க், மற்ற பகுதிகளில் அதிகபட்சமாக தொற்றுநோய்கள் பதிவாகின்ற நிலையில், பூஜ்ஜிய கொரோனா பாதிப்புகள் உள்ள 13 கிராமங்கள் மாவட்டத்திற்கு ஒரு பெரிய நிவாரணம் எனத் தெரிவித்துள்ளார்.மாவட்டத்தின் 166 கிராமங்களிலும் ஒரே நேரத்தில், அங்கன்வாடி தொழிலாளர்கள் மற்றும் ஆஷா தொழிலாளர்கள் அடங்கிய சுகாதாரத் துறை குழுக்கள், மே 15 முதல்மக்களிடம் கொரோனா சோதனை மேற்கொண்டு வருகின்றன.