இந்திய ரயில்வே இதுவரை 18 ஆயிரத்து 980 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜனை 1,141 டேங்கர்களில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கியுள்ளது. ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ‘இதுவரை 284 ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வெற்றிகரமாக தங்கள் பயணத்தை முடித்து, தமிழ்நாடு, பஞ்சாப், கேரளா, டெல்லி, உத்தரபிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட 15 மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் மூலம் ஆக்ஸிஜன் நிவாரணம் அளித்துள்ளது. சமீபத்தில் ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக அதிகபட்ச ஒற்றை நாள் அளவாக 1,195 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை கொண்டு சென்றுள்ளது.’ என தெரிவித்துள்ளது.