ஆண்டுதோறும் ஏப்ரல்15 முதல் ஜுன் 15ம் தேதி வரை மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால், புதுச்சேரியில் மீன்பிடித் தடைக்கால நிவாரண நிதியாக ரூ. 5,500 வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும், இந்த நிவாரணத் தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். 15,983 மீனவ குடும்பங்களுக்கு சுமார் 8.79 கோடி நிவாரணமாக வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா தொற்றின் இரண்டாவது அலை, ஊரடங்கு காரணங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் புதுச்சேரி மக்களுக்கு பொருளாதார ரீதியில் உதவும் வகையில், அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.3,000 வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.