ஐ.எம்.ஏ தலைவர் மீது கிரிமினல் வழக்கு

ஐ.எம்.ஏ தலைவர் டாக்டர் ஜான்ரோஸ் ஆஸ்டின் ஜெயலால் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ சங்கம் நாட்டின் மிகப்பெரிய மருத்துவ தொழில்முறை அமைப்பு. இது மதச்சார்பற்றதாகவும், அரசியல் சாராததாகவும் இருக்க வேண்டும் என்பது நியதி.

ஆனால், தமிழகத்தை சேர்ந்த தீவிர கிறிஸ்தவ மதவாதியான டாக்டர் ஜெயலால், கடந்த ஆண்டு அக்டோபரில் ஐ.எம்.ஏ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  ஹக்காய் இன்டர்நேஷனலுக்கான ஒரு நேர்காணலில், ‘தனது ஆன்மீக வாழ்க்கையை மீட்டெடுப்பதோடு, கிறிஸ்தவ நற்செய்தியை பரப்புவதற்காக அவரது இந்தப் பதவியை பயன்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பு’ என அவர் கூறியுள்ளார். 2018ல் நடைபெற்ற ஹக்காய் லீடர் அனுபவ கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டார். ஜெயலால் இதற்கு முன்னர் பலமுறை ஹிந்து மதம் மற்றும் பண்டைய பாரத நாகரிகத்தின் மீது தனது வெறுப்பை வெளிப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுஷ் அமைச்சகத்தின் கூட்டு மருத்துவமுறை, ஆயுர்வேத மருத்துவர்கள் உரிய பயிற்சியுடன் அறுவை சிகிச்சை செய்வது உள்ளிட்ட யோசனைகளையும் அவர் நிராகரித்திருந்தார். மேலும், ‘அவர்கள் அதை ஒரு தேசம்,  ஒரு மருத்துவ முறையாக மாற்ற விரும்புகிறார்கள். அடுத்து, அவர்கள் அதை ஒரு தேசம் ஒரு மதமாக மாற்றுவார்கள். இது சமஸ்கிருத மொழியை அடிப்படையாகக் கொண்டது, ஹிந்து பாரம்பரிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. சமஸ்கிருத மொழியையும் ஹிந்துத்துவாவையும் மக்களின் மனதில் திணிக்கிறார்கள்.’ என அரசு திட்டங்கள் குறித்து தவறாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், மதமாற்றம் செய்ததற்காக தனது அலுவலகத்தை தவறாக பயன்படுத்தியதற்காக ஜெயலால் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.