தெரசாவின் மறுபக்கம்: – வெளியான உண்மைகள்

மதம் மாற்றுவது ஒன்றையே தனது குறிக்கோளாகக் கொண்டு பாரதம் வந்தவர் தெரசா.’அன்னை தெரசா’ என அழைக்கப்படுவதற்கு அவர் தகுதி இல்லாதவர் என பல ஆண்டுகளாக, பலரால் தெரசா குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அவரது பழமையான பழக்கவழக்கங்கள், அவரது சிக்கலான வரலாற்று பின்னணி, பலவீனமனவர்கள், ஆதரவில்லாதவர்கள், பாதிக்கப்பட்டவர்களை வலுக்கட்டாயமாக மதம் மாற்றுவது, அனாதை குழந்தைகளை அவர் சார்ந்த கிறிஸ்தவ மதப்பிரிவினருக்கு மட்டுமே தத்துக் கொடுப்பது என அவர் குறித்த பல்வேறு விமர்சனங்களும் அவர் இருந்தபோதே வைக்கப்பட்டன. மதமாற்றத்தை மேற்கொள்ள வசதியாக பல பத்திரிகைகள், தொலைகாட்சிகள், அறிவு ஜீவிகள், அரசியல்வாதிகள், சில கிறிஸ்தவ நாடுகள் என அனைவரும் சேர்ந்து தெரசாவை மனிதரில் ஒரு புனிதராக காட்டி ஒரு போலி பிம்பத்தை கட்டமைத்தன என்ற கூற்றும் பலரால் பல காலமாக முன்வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தி டர்னிங்:

இந்த சூழலில், தெரசாவின் கடுமையான விமர்சகர்களில் ஒருவராக இருந்த பிரபல ஆங்கில அமெரிக்க சமூக அரசியல் விமர்சகர் மற்றும் பொது அறிவு ஜீவியான கிறிஸ்டோபர் ஹிச்சன்ஸ், பல ஆண்டுகளுக்கு முன்பு கூறிய கூற்றை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டு “தி டர்னிங்: தி சிஸ்டர்ஸ் ஹூ லெஃப்ட்” என்ற புதிய போட்காஸ்ட் வெளியிடப்பட்டது. அதில், தெரசாவின் சேவைக்கு தங்களை சமர்ப்பித்த பெண்களும் மற்றும் தங்கள் முழு வாழ்க்கையையும் அவரது மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டிக்கு அர்ப்பணித்த மேரி ஜான்சன், கோலெட் லிவர்மோர், கெல்லி டன்ஹாம் உல்ளிட்ட பல பெண்களும் அந்த மூடிய கத்தோலிக்க சபைக்கு பின்னால் நடந்த பல அதிர்ச்சிகரமான உண்மைகளையும் தங்கள் மனகுமுறல்களையும் வெளியிட்டுள்ளனர்.

வாக்குமூலம்:

கன்னியஸ்திரிகளுக்கு ராணுவப் பயிற்சி அளிப்பது, கட்டாய தனிமைப்படுத்துதல், சுயமாக ‘கசையடி’ கொடுத்துக்கொள்வது, குளிக்க அனுமதிக்காதது, கூர்மையான முட்கள் பதித்த உடைகளை அணியுமாறு கட்டாயப்படுத்துவது உள்ளிட்ட பல மோசமான பழக்கவழக்கங்களையும் பல ரகசிய சடங்குகளையும் கொண்ட ஒரு வழிபாட்டு அமைப்பாக மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி நடந்துகொண்டது. கன்னியாஸ்திரிகள் மிக மிக அவசரகால சூழ்நிலைகளைத் தவிர, அவர்களது குடும்ப உறுப்பினர்களிடம் தொலைபேசிகளில் பேசக்கூட தடை விதிக்கப்பட்டிருந்தது.அவர்கள் வீட்டிற்குச் செல்ல சுதந்திரமில்லை.10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே தங்கள் வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஒரு சகோதரி ஒரு சகோதரியுடன் இன்னொரு சகோதரியுடன் நெருக்கமாக பேச, பழகத் தடை, ஒருவருக்கொருவர் தொடுவதற்கான தடை என பல தடைகள் விதிக்கப்பட்டிருந்தன’ என பல கன்னியாஸ்திரிகள் இந்த போட்காஸ்ட்டில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

ஊடக சாட்சியங்கள்:

தெரசாவை விமர்சித்ததால் பல ஆண்டுகள் உயிருக்கு அஞ்சி பயத்துடனேயே வாழ்ந்தடாக்டர் அரூப் சாட்டர்ஜி, இறுதியாக ‘தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் தெரசாவின் மிஷனரிகளால் நடத்தப்படும்மருத்துவமனைகளின் அருவருப்பான யதார்த்தத்தைப் பற்றி மனம் திறந்தார். மிஷனரிமருத்துவமனைகளில் படுக்கையில் கட்டப்பட்டதால் குழந்தைகள் வேதனையுடன் அலறுவதை நான் கண்டேன்.வலியைக் குறைக்க ஆஸ்பிரின் தவிர வேறு எந்த நிவாரணமும் வழங்கப்படாததால் இறக்கும் நோயாளிகள் துயரத்தில் அழுவதையும் கண்டேன்.இவை அனைத்தும் அவர்களது ‘துன்ப வழிபாட்டின்’ ஒர் பகுதியாகவே இருந்தது என சாட்டர்ஜி அதில் குறிப்பிட்டுள்ளார். இதைத்தவிர, கிறிஸ்டோபர் ஹிச்சன்ஸ் மற்றும் பத்திரிகையாளர் தாரிக் அலி தயாரித்துள்ள ‘ஹெல்ஸ் ஏஞ்சல்ஸ்’ என்ற ஆவணப்படத்தில் தெரசாவின் மதஅமைப்புகளின் அருவருப்பான எதார்த்தத்தை பொது வெளியில் கொண்டு வந்தது. வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட ஒரு அறிக்கையில், ‘தெரசாவின் மிஷனரிகளால் நடத்தப்படும் மருத்துவமனைகளில் இறந்து கொண்டிருக்கும் நோயாளிகள்,  இறப்பதற்கு முன்கட்டாயப்படுத்தி கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்டார்கள்’ என்ற உண்மை வெளியானது.