பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைக்கு உதவும் வகையில் பல நாடுகளுக்கு, அமெரிக்கா ராணுவ நிதியுதவி அளித்து வருகிறது.பல ஆண்டுகளாக இந்த நிதியுதவியை பாகிஸ்தானும் பெற்று வந்தது.ஆனால், பயங்கரவாதிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் பாகிஸ்தான் அரசு எடுக்கவில்லை.எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருகிறது.உலகில் உள்ள அனைத்து பயங்கரவாதிகளின் சொர்க்கபுரியாக பாகிஸ்தான் உள்ளது என அனைத்து நாடுகளும்புகார் தெரிவிக்கின்றன.இதனால், கடந்த 2018 முதல், பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் ராணுவ நிதியுதவியை, அன்றைய அமெரிக்க அதிபர் டிரம்ப் நிறுத்தி வைத்தார்.இந்த ஆண்டு அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜோ பிடன் அதிபரானார்.இதனால், ‘ராணுவ நிதியுதவியை அமெரிக்கா அளிக்கும்’ என பாகிஸ்தான் எதிர்பார்த்தது.ஆனால், பாகிஸ்தானுக்கு ராணுவ நிதியுதவி நிறுத்தத்தை தொடர அதிபர் ஜோ பிடன் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.இதனை அமெரிக்க ராணுவ தலைமையகமான, ‘பென்டகனின்’ செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி உறுதி செய்துள்ளார்.