ஏ.பி.வி.பி கோரிக்கை

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் குறித்து முடிவெடுக்கும்போது, மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்தை மனதில் வைத்து மத்திய மாநில அரசுகள் முடிவெடுக்க வேண்டும்என்று  அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) என்ற மாணவர் அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது. ஏ.பி.வி.பியின் தேசிய பொதுச் செயலாளர் நிதி திரிபாதி கூறுகையில், ‘பல்வேறு இளங்கலை பாடதிட்டங்களில் மாணவர்கள் சேர்க்கை 12ம் வகுப்பு மதிப்பெண்கள் மற்றும் தகுதி பட்டியலை அடிப்படையாகக் கொண்டது என்பதால் மாணவர்களின் 12ம் வகுப்புமதிப்பெண்கள் முக்கியத்துவத்தைப் பெறுகிறது. அதே சமயம், மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி வாய்ப்புகளையும் அரசுகள் கவனத்தில் கொள்வது அவசியம்.’ என தெரிவித்தார்.மேலும் அந்த அமைப்பு, ‘தேர்வை நடத்த வேண்டும் என்பதற்காக எந்தவொரு முடிவையும் அவசரமாக எடுக்க வேண்டாம். தற்போது நிலவும் கொரோனா சூழ்நிலைக்கு ஏற்ப, ​​குறுகிய கால தேர்வு, திறந்த புத்தகத் தேர்வுகள், முக்கிய பாடங்களுக்கான தேர்வுகளை ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சமூக இடைவெளியோடு நடத்துது, பல்கலைக்கழக மாணவர்களைப் பொறுத்தவரை, குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வுகளைஅரசுகள் பரிசீலிக்க வேண்டும், அதிக மாணவர்களுக்கு மிகக் குறைந்த நேரத்தில் தடுப்பூசி போடுவதற்காக பள்ளி கல்லூரி வளாகங்களில் தடுப்பூசி மையங்களை அமைக்கலாம்’ என தேர்வுகள் குறித்து பரிசீலிக்க சில மாற்று வழிமுறைகளையும் பரிந்துரைத்துள்ளது.