ஹரித்வாரில் ஆயுர்வேதம் மற்றும் அலோபதி மருத்துவ முறை இணைந்த கொரோனா சிகிச்சை மையத்தை உருவாக்கி உள்ளதாக அறிவித்தார் பிரபல யோகா குரு பாபா ராம்தேவ்.இந்த கொரோனா சிகிச்சை மையத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக இல்லை என கூறப்பட்டது.சில நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராம்தேவ், அலோபதி மருத்துவத்தால் கொரோனாவுக்கு மக்கள் பலியாகின்றனர்.இது ஒரு முட்டாள்தனமான சிகிச்சை முறை என கூறினார்.இது அலோபதி மருத்துவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இது தொடர்பாக பாபா ராம்தேவுக்கு இந்திய மருத்துவர் சங்கம் (ஐ.எம்.ஏ) நோட்டீஸ் அனுப்பியதுடன் பாபா ராம்தேவை கைது செய்யவும் வலியுறுத்தியது. இந்த கடிதத்தில் கையெழுத்திட்டவர் தமிழகத்தை சேர்ந்த ஐ.எம்.ஏவின் தேசியத் தலைவர் டாக்டர் ஜே.ஏ.ஜெயலால்
யார் இந்த ஜெயலால்?
கிறிஸ்தவரான டாக்டர் ஜே.ஏ.ஜெயலால், சக மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், நோயாளிகளிடம் கிறிஸ்துவ மதத்தை பரப்ப, இந்திய மருத்துவ சங்கத்தையும், தன் பதவியையும் ,மருத்துவமனைகளையும் தவறாக பயன்படுத்த விரும்பியதாக குற்றம் சாட்டப்பட்டவர்.
மன்னிப்பு கேட்ட யோகா குரு:
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், பாபா ராம்தேவ் தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.பாபா ராம்தேவும் தன்னுடைய கருத்துகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டு மன்னிப்பும் கேட்டார்.
ராம்தேவின் கேள்விகள்:
இந்நிலையில், இந்திய மருத்துவர் சங்கத்திடம், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் தூக்கமின்மைக்கு அலோபதியில் நிரந்தர சிகிச்சைகள் உள்ளதா என்பது உள்ளிட்ட 25 கேள்விகளை கேட்டுள்ளார். அதில், உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதன் சிக்கல்கள், நீரிழிவு (வகை 1, வகை 2) மற்றும் அவற்றின் சிக்கல்கள், தைராய்டு, கீல்வாதம், பெருங்குடல் அழற்சி, ஆஸ்துமா, காசநோய், அம்மை, கல்லீரல் கொழுப்பு, கல்லீரல் சிரோசிஸ், ஹெபடைடிஸ், மலச்சிக்கல், இரைப்பை, அமிலத்தன்மை, ஹீமோகுளோபின், கண்பார்வை, செவிப்புலன் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு தலைவலி, ஒற்றைத் தலைவலி, தூக்கமின்மை ஆகியவற்றுக்கு சிகிச்சையளிக்க அலோபதி எந்த பக்கவிளைவுகளும் இல்லாத நிரந்தர தீர்வை வழங்குகிறதா? என கேட்டுள்ளார்.
தொடரும் கேள்விகள்:
இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு அலோபதியில் அறுவை சிகிச்சை இல்லாத சிகிச்சைகள் என்ன உள்ளது?ஈறுகள், பற்கள் பலவீனமடைவதைத் தடுக்கக்கூடிய நிரந்தர சிகிச்சையை வழங்க முடியுமா?அறுவை சிகிச்சை இல்லாமல் ஒரு நபர் ஒவ்வொரு நாளும் அரை கிலோ முதல் ஒரு கிலோவரை எடையை குறைக்க உதவும் ஒரு மருந்து இருக்கிறதா? தடிப்புத் தோல் அழற்சி, கீல்வாதம், வெண் புள்ளிகள், பார்கின்சன் நோய், ஸ்பான்டைலிடிஸ் ருமட்டாய்ட் ஆர்த்தரைடிஸ் ஆகியவற்றை நேர்மறையிலிருந்து எதிர்மறையாக மாற்றுவதற்கு அலோபதி மருத்துவர்கள் நிரந்தர தீர்வை வழங்க முடியுமா? மன அழுத்த ஹார்மோன்களைக் குறைக்கவும், அலோபதியில் மகிழ்ச்சியான, நல்ல ஹார்மோன்களை அதிகரிக்கவும் ஏதாவது சிகிச்சை உள்ளதா?ஐ.வி.எஃப் தவிர, அலோபதி கருவுறாமைக்கு ஏதாவது இயற்கை முறையிலான சிகிச்சை உள்ளதா?போதைப்பொருள் பழக்கவழக்கத்தையும் கைவிட அலோபதி மருந்து ஏதேனும் உள்ளதா?கொரோனா நோயாளிகளுக்கு திரவ மருத்துவ ஆக்ஸிஜனைப் பயன்படுத்தாமல் சிகிச்சையளிக்க தீர்வு இருக்கிறதா?கடைசியாக, ஒவ்வொரு நோய்க்கும் அலோபதி தீர்வு மற்றும் சிகிச்சையை கொண்டிருக்கும்போது மருத்துவர்கள் ஏன் நோய்வாய்ப்படுகிறார்கள்?என கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனாவுக்கு எதிரான போரில் பதஞ்சலி:
கொரோனா மருத்துவம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளில் தொடர்ச்சியாக சிக்கினாலும் பதஞ்சலி கொரோனாவுக்கு எதிரான போரில் நிதியுதவி, மருத்துவம் என முக்கிய பங்காற்றியுள்ளதை யாரும் மறுக்க முடியாது. சமீபத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) கண்டுபிடித்த 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டிஜி) என்ற கொரோனா எதிர்ப்பு சிகிச்சை மருந்துக்கு ஒப்புதல் பெற்றது. அந்த மருந்து கொரோனா நோயாளிகள் விரைவாக நலம் பெறவும் ஆக்ஸிஜன் தேவையில்லாமல் சுவாசிக்கவும் பேருதவி செய்வது நிரூபிக்கப்பட்டுள்ளது.அந்த மருந்தை டாக்டர் ரெட்டிஸ் லெபாரட்டரியுடன் இணைந்து டி.ஆர்.டி.ஓ தயாரிக்க உள்ளது.ஆனால், டி.சி.ஜி.ஐ ஒப்புதல் அளித்த இந்த புதிய கோவிட் -19 மருந்து குறித்த ஆய்வுக் கட்டுரையை வெளியிட்ட முதல் இந்திய நிறுவனம் பதஞ்சலிதான். கொரோனாவுக்கு எதிரான முதல் சான்றுகள் சார்ந்த ஆயுர்வேத மருந்து குறித்த ஆராய்ச்சியை வெளியிட்டதால் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கடந்த ஆண்டு ஆயுஷ் அமைச்சகத்திலிருந்து சான்றிதழும் பெற்றது.
எது சிறந்த மருத்துவம்:
உலகில் உள்ள எந்த மருத்துவமுறையும் முழுமையானது இல்லை.அனைத்திலும் நிறை குறைகள் இருக்கவே செய்கின்றன.நமது பாரம்பரிய மருத்துவமுறையில் தீர்வு உள்ளது என கூறப்பட்டாலும், முற்காலத்தில் இருந்த மருத்துவமுறைகளில் பல வழக்கொழிந்துவிட்டன அல்லது மறக்கடிக்கப்பட்டுவிட்டன. உலக சுகாதார நிறுவனம், ‘ஆங்கில மருத்துவத்தால் சில நோய்களை தீர்க்க முடியாது எனவே அந்த மருத்துவர்கள் அதனை சரி செய்வோம் என நோயாளிகளுக்கு உறுதியளிக்கக் கூடாது’ என கூறி அதற்குத் நீண்டதொருப் பட்டியலே வெளியிட்டுள்ளது. எனவே, அனைத்துத்துறை மருத்துவர்களும் இணைந்து ஒருங்கிணைந்த சிகிச்சைமுறையை மேற்கொள்வதை குறித்து ஆராய வேண்டும்.இதில் ‘நோயாளியின் ஆரோக்கியம்தான் முக்கியமே தவிர, நீ பெரியவனா, நான் பெரியவனா’ என்ற போக்கு தேவையற்றது.மருத்துவத் தந்தை அலோபதி மருத்துவர்கள் குறிப்பிடும் ஹிப்போகிரேடஸ்கூட கூட்டு மருத்துவமுறையை ஆதரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மதிமுகன்