கொரோனா வைரஸின் மாறுதல் அடைந்த புதிய B 1.617 வகையை ‘இந்திய வகை கொரோனா வைரஸ்’ என்று குறிப்பிடும் அனைத்து உள்ளடக்கங்களையும் நீக்குமாறு சமூக ஊடகங்களுக்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவை பிறப்பித்திருந்தது. ஆனால், அந்த உத்தரவை மீறும் வகையில்,’டைம்ஸ் நவ்’அதன் டிவிட்டர் உள்ளிட்ட செய்திகளில் மீண்டும் ‘இந்திய வகை வைரஸ்’ என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளது. எனவே, ‘டைம்ஸ் நவ்’ மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சமீபத்தில் கசிந்த காங்கிரசின் கருவித்தொகுப்பில் (டூல் கிட்), B1.617 வகை வைரசை ‘இந்திய வகை வைரஸ்’ என்று பெயரிட்டு அழைப்பது குறித்த குறிப்புகள் இருந்தது. இந்த ‘டூல் கிட்’ விவகாரம் காங்கிரசின் தேச விரோத நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டு காட்டுவதாக பரவலான கண்டனத்திற்கு உள்ளானது என்பதும் நினைவு கூரத்தக்கது.