மிசோரத்தில் மியான்மர் அகதிகள்

நமது அண்டை நாடான மியான்மரில் கடந்த பிப்ரவரி 1ல் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து அங்கு பலர் கொல்லப்பட்டுள்ளனர். அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் என பலர் கைது செய்து சிறை வைக்கப்பட்டுள்ளனர். இதனால், உயிருக்கு அஞ்சி பாரதத்தின் எல்லையோர மாநிலங்களில் அங்கிருந்து வந்த பலர் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர். தற்போதுவரை 15,438 பேர் மிசோரம் மாநிலத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருவது கவலையளிக்கிறது. மியான்மர் பிரஜைகள் சிலர் மிசோரமில் உள்ள தங்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கக்கூடும் என மாநில திட்டமிடல் வாரியத்தின் துணைத் தலைவர் எச். ராம்மாவி, வெளிவிவகார அமைச்சகத்தின் மியான்மர் மற்றும் பங்களாதேஷுக்கான இணைச் செயலாளர் ஸ்மிதா பந்த்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.