போற்றத்தக்க போஷின் நடவடிக்கை

ஜெர்மன் பன்னாட்டு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான போஷ் சமீபத்தில் தன் ஊழியர் ஒருவரால் ஒரு சமூக ஊடகப் பிரச்சனையை எதிர்கொண்டது. அந்நிறுவனத்தில் பணிபுரியும் மென்பொறியாளரான அபுபக்கர் சித்திக் என்பவர், ஹிந்து சமூகம் மற்றும் பாரத இராணுவம் பற்றி தவறாக தன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். அவரது கிரியேட்டிவ் மார்னிங் என்ற சமூக வலைத்தள கணக்கில் இது குறித்து ஆராய்ந்தபோது, ஹிந்துக்கள் மீதான இனப்படுகொலைகளுக்கு ஆதரவாகவும் பாரத ராணுவத்தின்  மானண்புகளை சிதைக்கும் வகையிலும், பயங்கரவாதத்துக்கு ஆதரவாகவும் செய்திகள் வெளியிடப்பட்டு இருந்தன. அதனால், அந்த கணக்கு தற்போது முடக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரித்த போஷ் நிறுவனம், ‘ஒரு நெறிமுறை மற்றும் மதிப்பு சார்ந்த அமைப்பாக, எந்தவொரு நபரின், இனத்தின் அல்லது அமைப்பின் உணர்வுகளை புண்படுத்தும் கருத்துக்களை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்.’ என தெரிவித்து அபுபக்கர் சித்திக்கை உடனடியாக வேலையை விட்டு நீக்கியதாக அறிவித்துள்ளது.