பணியின்போது மதப்பிரச்சாரம்

மத்தியப் பிரதேசத்தின் ரத்லம் மாவட்டத்தில், பஜாலாவின் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதியில், கொரோனா தொற்றுநோய் விழிப்புணர்வூட்டும் பணியில் ஈடுபட்டிருந்த சந்தியா திவாரி என்ற அரசுப் பணியில் உள்ள செவிலியர், கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் சாக்கில், ‘ஏசுவிடம் பிரார்த்தனை செய்வதன் மூலம், மக்கள் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம்’ என தவறாக பட்டியலின பழங்குடி மக்களிடம் மதப்பிரச்சாரம் செய்யும்போது, வீடியோ ஆதாரத்துடன் கையும் களவுமாக சிக்கினார். அவரிடம் இருந்த மதப்பிரச்சார துண்டு பிரசுரங்கள் காவல்துறையால் கைப்பற்றப்பட்டது. இது குறித்து காவல்துறையும் மாவட்ட நீதிபதியும் விசாரித்தபோது, தான் தவறு செய்யவில்லை என மணிக்கணக்கில் வாதாடியுள்ளார். இவரின் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியானதால், ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த மார்ச் மாதத்தில் இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவரான டாக்டர் ஜே.ஏ. ஜெயலால், கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக, கொரோனா தொற்றுநோயை பயன்படுத்திக் கொண்டார். மருத்துவ மாணவர்கள், சக ஊழியர்கள், நோயாளிகள் என பலரை கிறித்துவ மதத்திற்கு மாற்ற மருத்துவமனைகளையும் தனது தொழிலையும் தவறாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.