மேற்கு வங்கத்தில், திருணமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.கவில் இணைந்தவர் சுவேந்து அதிகாரி. இவர் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் மமதா பானர்ஜியை நந்திகிராமில் தோற்கடித்தார். மமதா பானர்ஜி மீண்டும் மேற்கு வங்க முதல்வராக பதவியேற்றதால் சுவேந்து அதிகாரிக்கு கொலை மிரட்டல்கள் அதிகரித்தன. இதனால் அவருக்கு, ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், சுவேந்து அதிகாரியின் தந்தையான சிசிர் குமார் அதிகாரி தற்போது பா.ஜ., எம்.பியாக உள்ளார். அவரது தம்பியான திபையந்து அதிகாரி திருணமுல் காங்கிரஸ் எம்.பியாக உள்ளார். இவர்களுக்கும் திருணமுல் காங்கிரஸ் கட்சியினரால் உயிருக்கு அச்சுறுத்தல் அதிகரித்து உள்ளது என்ற மத்திய புலனாய்வு துறையின் பரிந்துரையை ஏற்று அவர்களுக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.