அமெரிக்காவில் கடந்த மார்ச் மாதத்தில், அட்லாண்டா பகுதியில் உள்ள அழகு நிலையங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், ஆசிய பெண்கள் 6 பேர் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து அமெரிக்கா வாழ் ஆசிய நாட்டினர் மீது வெறுப்புத் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்தன. அவர்களைப் பாதுகாக்க ஆசிய அமெரிக்கர்கள் மீதான வன்முறைத் தடுப்பு மசோதாவில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டதை அடுத்து அந்த மசோதா சட்டமாகி உள்ளது. அமெரிக்கா முழுவதும் வெறுப்பு குற்றங்களைப் பதிவு செய்ய தனிப் பிரிவுகளும், உதவி தொலைபேசி எண்களும் துவங்கப்படும். தாக்குதல் சம்பவங்களுக்கு உள்ளானவர்கள் தெரிவிக்கும் புகார்கள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.