நாரதா ஊழல் வழக்கு

மேற்கு வங்கத்தில், ‘நாரதா’ ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இரு திரிணமுல் காங்கிரஸ் அமைச்சர்கள் உள்ளிட்ட நான்கு பேரின் ஜாமீன் மனுக்களை விசாரித்து வருகிரது கொல்கட்டா உயர் நீதிமன்றம். இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில், நீதிபதிகளின் கருத்து வேறுபாடு காரணமாக மூன்று நீதிபதிகள் உடைய அமர்வு விசாரிக்க சி.பி.ஐயால் கோரிக்கை வைக்கப்பட்டது. அதுவரை, கைது செய்யப்பட்டவர்களை வீட்டுக் காவலில் வைக்க கோல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாரதா வழக்கு என்பது என்ன?

திருணமுல் காங்கிரசின் ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் வகையில், கோல்கட்டாவில் ‘நாரதா நியூஸ்’ என்ற செய்தி இணையதளம், 2014ல் போலியாக துவக்கப்பட்டது. இந்த நிறுவனத்திற்கு சலுகைகள் கோரி அப்போது ஆட்சியில் இருந்த திருணமுல் காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏக்களை அந்த நிறுவனம் அணுகியது. அவர்கள் கேட்ட பல லட்சம் ரூபாய் லஞ்சத்தை கொடுத்ததுடன் அதை ரகசியமாக படம் பிடித்தது. இந்த வீடியோ 2016ல் வெளியாகி தேசம் முழுவதும் பரபரப்பானது. இந்த ஊழலில், திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல மூத்த தலைவர்கள் சிக்கினர். எனினும் 2016ல் திருணமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்நிலையில், 2017ல் நாரதா ஊழல் வழக்கை விசாரிக்கத் துவக்கிய சி.பி.ஐ, இந்த வழக்கில் தொடர்புடைய, திருணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் பிர்ஹாத் ஹக்கீம், சுப்ரதா முகர்ஜி, சட்டமன்ர உறுப்பினர் மதன் மித்ரா, திரிணமுல் காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும், தற்போது பா.ஜ.கவில் இணைந்தவருமான சோவன் சாட்டர்ஜி ஆகியோரை சமீபத்தில் கைது செய்தது.