ரத்ததான முகாமைத் தடை செய்த போராளிகள்

ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள், தேவைப்படுபவர்களுக்கு உதவுவதற்கும் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் என்றும் முன்னணியில் உள்ளவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அவ்வகையில், ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மற்றும் பா.ஜ.க தன்னார்வலர்கள் இணைந்து பஞ்சாபின் ரோப்பர் மாவட்டத்தில் உள்ள நூர்பூர்பேடி கிராமத்தில் ரத்ததான முகாமை ஏற்பாடு செய்திருந்தனர். கொரோனா காலத்தில் இப்பகுதியில் கடுமையான ரத்த பற்றாக்குறை இருப்பதால் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அங்கு விவசாயிகள் என்ற பெயரில் வந்த ஒரு கும்பல், முகாமில் வைக்கப்பட்டிருந்த நாற்காலி மேஜைகளைத் தூக்கி எறிந்து, பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். விவசாய சட்டங்களை நீக்காதவரை, பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகள் மாநிலத்தில் எந்தவொரு நிகழ்வையும் ஏற்பாடு செய்ய அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறினர். முகாமின் அவசியத்தை எடுத்துக் கூறியும் கேட்காத கும்பல் மூர்கமாக நடக்கத் துவங்கினர். நிலைமை கைமீறி சென்றதால், காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதனால் ரத்த தான முகாம் நிறுத்தப்பட்டது.