சென்னைக்கு வந்த 11வது ஆக்சிஜன் ரயில்

ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து, தமிழகத்துக்கு 11வது ஆக்சிஜன் ரயில் 78.58 டன் ஆக்சிஜனுடன் வந்தது. மத்திய அரசு ஏற்பாட்டில், தமிழகத்துக்கு தேவையான ஆக்சிஜன், சிறப்பு ரயில்கள் மூலம் கொண்டு வரப்படுகிறது. அவ்வகையில், இதுவரை, 11 சிறப்பு ரயில்கள் மூலம் 584.45 டன் ஆக்சிஜன் தமிழகம் வந்துள்ளது.