இந்திய கடற்படையின் முன்னணி போர்கப்பல்களில் ஒன்றான ‘ஐ.என்.எஸ் ரஜ்புத்’ எனும் நாசகாரி கப்பல், வருகிற மே 21ல் ஒய்வு பெற உள்ளது. ரஷ்ய தயாரிப்பு கப்பலான இது, கடந்த 1980ம் வருடம் மே மாதம் 4ம் தேதி இந்திய கடற்படையில் இணைந்து தனது சேவையை துவங்கியது. தனது 41 வருட சேவைக் காலத்தில் மிக முக்கிய கடற்படை ஆபரேஷன்களை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. பிரம்மோஸ் ஏவுகணையின் கடற்படை வடிவம் இக்கப்பலில் இருந்து தான் முதல்முறையாக ஏவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற மே 21 அன்று மாலை விசாகப்பட்டினம் கடற்படை தளத்தில் நடைபெறும் விழாவில் கப்பலின் சின்னமும் இந்திய கடற்படையின் கொடியும் இறக்கப்பட்டு கப்பலுக்கு ஒய்வு அளிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.