குறையும் கொரோனா

பாரதத்தில் கொரோனா இரண்டாவது அலை தற்போது இறங்குமுகத்தில் உள்ளது. ஆனால், தமிழகத்தில் கொரோனா இன்னும் உச்சம் தொடவில்லை என ஒரு ஆய்வில் கூறப்பட்டுள்ளது. கான்பூர் ஐ.ஐ.டி., மாணவர் அகர்வால், ஐதராபாத் ஐ.ஐ.டி., மாணவர் வித்யாசாகர், தேசிய பாதுகாப்பு அலுவலர் கனிட்கர் ஆகியோர் இணைந்து கொரோனா குறித்து கிடைத்துள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில் <www.sutra-india.in> என்ற ஒரு வலைதளத்தை உருவாக்கியுள்ளனர். அதில் பாரதத்தில் கொரோனாவின் இரண்டவது அலையின் தாக்கம் எப்படியுள்ளது, ஒவ்வொரு மாநிலத்திலும் அதன் தாக்கம் குறித்து கணித்து வரைபடமாக வெளியிட்டுள்ளனர். அவர்களின் கணிப்பும், நடப்பும் ஓரளவு ஒத்து போகிறது என கூறப்படுகிறது. அவர்கள், பாரதத்தில் இரண்டாவது அலையின் இறங்குமுகம் ஏற்கனவே துவங்கி விட்டது. ஆகஸ்ட் கடைசி வாரத்தில் அது வீழ்ச்சியுறும் என கணித்துள்ளனர். தென்னிந்தியாவில் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் உச்சம் தொட்டு இறங்க துவங்கியுள்ளது. ஆனால், தமிழகம், புதுவையில் ஜூன் முதல் வாரத்தில் தான் இரண்டாவது அலை உச்சநிலையை அடையும். அதன் பிறகுதான் இறங்குமுகம் துவங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.