போலி 2-டிஜி மருந்து எச்சரிக்கை

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓவுடன் இணைந்து வாய்வழி கொரோனா தடுப்பு மருந்தான 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டிஜி) தயாரிக்கும் டாக்டர் ரெட்டிஸ் லெபாரட்டரிஸ் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில், ‘2-டிஜி இதுவரை சந்தையில் அறிமுகப்படுத்தப்படவில்லை விலை இன்னும் முடிவு செய்யப்படவில்லை. 2டிஜி என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும் போலியான மருந்துகள், சட்டவிரோத மருந்துகளை விற்கும் முகவர்கள், சமூக ஊடக செய்திகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளது. 2 டிஜி மருந்து, முக்கிய அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு மட்டும் வணிக ரீதியாக ஜூன் நடுப்பகுதியில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.