வாகனங்களை திரும்பப்பெறும் என்பீல்டு

ராயல் என்பீல்டு’ நிறுவனம், கடந்த ஆண்டு டிசம்பர் முதல் நடப்பு ஆண்டு ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட கிளாஸிக், புல்லட், மீட்டியார் மாடல் வாகனங்களில் இக்னிஷின் காயிலில் பழுது உள்ளதாக தெரிய வந்ததையடுத்து பாரதத்தில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்து சுமார் 2.37 லட்சம் வாகனங்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. இந்த பழுது அரிதானது தான் எனினும், வாகன ஓட்டிகள் தகுந்த கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ள அந்த நிறுவனம், திரும்பப்பெறப்பட்ட வாகனங்களில் உள்ள குறைபாட்டை நீக்கி திருப்பித்தரும் வகையிலேயே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.