சறுக்கும் பில்கேட்ஸ்

உலகளவில் டெக் நிறுவனங்களின் தலைவர்கள் மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர். ஆனால் டெக் நிறுவனத் தலைவர்கள் பலரின் வாழ்க்கையில் சில கருப்புப் பக்கங்களும் இருக்கத்தான் செய்கிறது என்பதற்கு ஸ்டீவ் ஜாப்ஸ், எலான் மஸ்க் என பல உதாரணங்கள் உள்ளன. டெக் தலைவர்கள் மத்தியில் பில் கேட்ஸ் மட்டும் மிகவும் சிறந்த மனிதராகவும் ஆதர்ச நாயகராகவும் மக்களால் கருதப்பட்டு வந்தார். ஆனால் கடந்த சில மாதங்களாக இவர் குறித்து வெளியாகும் தகவல்கள் டெக் துறையை மட்டும் அல்ல, அனைத்துத் தரப்பு மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.