ரெம்டெசிவரும் கைவிடப்படுகிறது

‘ரெம்டெசிவர் மருந்தைப் பயன்படுத்தி சிகிச்சை அளிப்பதால் கொரோனா நோயாளிகளிடம் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. அது எந்த மாறுதலையும் ஏற்படுத்தவில்லை. அதனால், அதைக் கைவிட நாங்கள்  முடிவு செய்துள்ளோம். தற்போது மூன்று மருந்துகள் மட்டுமே கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன’ என டில்லி கங்கா ராம் மருத்துவமனையின் தலைவர் ராணா கூறியுள்ளார். முன்னதாக,  கொரோனா நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்பட்டு வந்த பிளாஸ்மா சிகிச்சை முறையும் பெரிய தாகத்தை ஏற்படுத்தாத காரணத்தால் இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தலின் படி சமீபத்தில் கைவிடப்பட்டது  என்பது குறிப்பிடத்தக்கது.