கேரள மத்திய பல்கலைக்கழகத்தில், சர்வதேச உறவுகள் மற்றும் அரசியல் துறையில் உதவி பேராசிரியராக உள்ளார் கிறிஸ்தவரான கில்பர்ட் செபாஸ்டியன் என்பவர். ‘பாசிசம் மற்றும் நாசிசம்’ குறித்த தனது ஆன்லைன் வகுப்பில், ‘பா.ஜ.கவின் வெற்றியின் பின்னர் பாரதம் ஒரு பாசிச நாடாகிவிட்டது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் சங்க பரிவார் என்று அழைக்கப்படுகிறது, அதாவது பாரதத்தில் சங்க குடும்பம் (பா.ஜ.க உட்பட) புரோட்டோ-பாசிச சக்தியாகக் கருதப்படலாம்’ என பொய்யான ஒரு குற்றச்சாட்டை மாணவர்களிடம் பரப்பினார் இவர். மேலும், ‘பா.ஜ.கவுக்கு எதிராக போராட போராளிகள் போரிட வேண்டும்’ என பயங்கரவாத கருத்துகளையும் பரப்பியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பின் சி.யு.கே பிரிவு ‘பாரதத்தை யாரும் ஒரு பாசிச நாடாக அடையாளப்படுத்தவில்லை. சில தேச விரோத சக்திகள் மட்டுமே பாரதத்தை ஒரு பாசிச நாடு என்று முத்திரை குத்த முயற்சிக்கின்றன’ என கூறியது. மேலும், துணைவேந்தர் பேராசிரியர் எச். வெங்கடேஷ்வருலுவுக்கு எழுதிய கடிதத்தில், துணைவேந்தர், கில்பர்ட் செபாஸ்டியன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் வெகுஜன போராட்டங்களை நடத்தப்போவதாக ஏ.பி.வி.பி தெரிவித்தது. இதனையடுத்து இந்த சர்ச்சையை குறித்து விசாரிக்க கல்லூரி டீன் கே.பி சுரேஷ், அரசியல் துறை பேராசிரியர் எம்.எஸ் ஜான் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் டாக்டர் முரளீதரன் நம்பியார் ஆகியோர் கொண்ட குழுவை துணைவேந்தர் நியமித்தார். அந்த குழுவின் அறிக்கையின்படி, குற்றச்சாட்டு உறுதியானதால், கேரள மத்திய பல்கலைக்கழகம் கடந்த திங்களன்று உதவி பேராசிரியர் கில்பர்ட் செபாஸ்டியனை இடைநீக்கம் செய்தது.