ஆயுதம் விற்கும் அமெரிக்கா

இஸ்ரேல் பாலஸ்தீனத்துடனான போர் பதட்டம் அதிகரித்துள்ள சூழலில், இஸ்ரேலுக்கு 735 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத விற்பனைக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் ஒப்புதல் அளித்துள்ளார். வாஷிங்டன் போஸ்டில் வெளியான ஒரு செய்தியின்படி, விற்பனை செய்யப்படும் ஆயுதங்களின் பெரும்பகுதி ஜே.டி.ஏ.எம்.எஸ் எனப்படும் கூட்டு நேரடித் தாக்குதல் ஆயுதங்களாக இருக்கும். இவைகளை துல்லியத் தாக்குதல் நடத்த ஏதுவான வழிநடத்தும் ஏவுகணைகளாக இஸ்ரேல் மாற்றி பயன்படுத்துகின்றன. கடந்த காலங்களில் அமெரிக்காவிலிருந்து ஏராளமான ஜே.டி.ஏ.எம்.எஸ்ஸை வாங்கியுள்ளது இஸ்ரேல். பொதுமக்கள் உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்காக காசாவில் உள்ள ஹமாஸ் மறைவிடங்களைத் தாக்க இந்தவகை துல்லியமான வழிகாட்டப்பட்ட ஏவுகணைகளையே இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வகை ஏவுகணைகளை பயன்படுத்தியே பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாதிகள் ஆயுதங்களைக் கடத்தவும் பயங்கரவாதிகளுக்கான பதுங்குமிடங்களாகவும் பயன்படுத்திய ‘மெட்ரோ’ என அழைக்கப்பட்ட நிலத்தடி சுரங்க வலையமைப்பையும், அல் ஜசீரா மற்றும் பிற சர்வதேச ஊடக அலுவலகங்கள் இருந்த ‘அல் ஜலா’ கட்டிடத்தையும் தாக்கி அழித்தது என்பது குறிப்பிடத்தக்கது.