கொரோனாவின் இரண்டாவது அலையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள வணிக நிறுவனங்களை ஆதரிப்பதற்காக திரிபுரா மாநில அரசு தனியாக ஒரு இணையதளத்தை துவங்கியுள்ளது. ‘பிரதம மந்திரியின் தலைமையின் கீழ் நாங்கள் தற்போது வேகமாக கொரோனாவில் இருந்து மீண்டு வருவதால் எங்கள் மக்களுக்கு ஆதரவளிக்க கடமைப்பட்டுள்ளோம். இது கடன் தேவைகள் மற்றும் பிற தேவைகளைக் கொண்ட தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு உதவும். இந்த இணையதளத்தில், வணிகர்கள் தங்களது வயது, இருப்பிடம், பாலினம், மதம், கல்வித் தகுதிகள், பொருளாதார நிலை மற்றும் வசிக்கும் பகுதி போன்ற விவரங்களுடன் உள்நுழையலாம். கல்வி (43), சிறு வணிக / வேலைவாய்ப்பு (16), விவசாயம் (14), ஓய்வூதியம் (12), சுகாதாரம் மற்றும் மருத்துவம் (10), வீட்டுவசதி (7), சமூக சேவைகள் (6) மற்றும் மீன்வளம் (1) என பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள மொத்தம் 109 திட்டங்கள் இந்த இணையதளத்தில் உள்ளன’ என அம்மாநில முதல்வர் பிப்லப் குமார் தேப் இதனை துவங்கி வைத்தபோது தெரிவித்தார்.