கொரோனா ஒருபுறம்; பணிச்சுமை மறுபுறம்

கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு மத்தியில், பணிச்சுமை காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2000 ஆண்டைவிட 30 சதவீதம் அளவிற்கு இத்தகைய உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது. வாரம் ஒன்றிற்கு 55 மணி நேரம் அல்லது அதற்கு மேல் பணியாற்றுவது உடல் நலத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என உலக சுகாதார நிறுவன இயக்குநர் மரியா நெய்ரா எச்சரித்துள்ளார். இதனை சரி செய்ய ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளார். தற்போதைய சூழலில் குறைந்தபட்சம் 9 சதவீதத்தினர் பணிச்சுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தென்கிழக்கு ஆசியா, மேற்கு பசுபிக் நாடுகள், சீனா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.